நேட்டோ (NATO) அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீத தற்காப்புச் செலவின இலக்கை கனடா உத்தியோகபூர்வமாக எட்டியுள்ளது.
பத்து வருடங்களுக்கும் மேலான காத்திருப்பிற்குப் பிறகு இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
2025 ஆம் ஆண்டில் கனடா தனது இராணுவத்திற்காக 60 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.01 சதவீதமாகும் என நேட்டோ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு வரை 1.47 சதவீதமாக இருந்த இந்தச் செலவினம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அழுத்தங்கள் மற்றும் ஆர்க்டிக் (Arctic) இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மேலதிகமாக 9.3 பில்லியன் டொலர்களை பிரதமர் கார்னி அண்மையில் ஒதுக்கீடு செய்திருந்தார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இந்த இலக்கை எட்ட 2037 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டிருந்து
இந்நிலையில், கார்னி அரசு அந்த இலக்கை மிக விரைவாகச் சாதித்துள்ளது.
அத்துடன், 2035 ஆம் ஆண்டிற்குள் நேட்டோவின் புதிய இலக்கான 5 சதவீதத்தை (ஆண்டுக்கு சுமார் 150 பில்லியன் டொலர்கள்) எட்டுவதற்கும் கனடா உறுதியளித்துள்ளது.
இந்தச் செலவினங்கள் இராணுவ வீரர்களின் ஊதிய உயர்வு, புதிய போர் விமானங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொள்வனவுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன
