அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு எச்சரிக்கை –  விமான நிலையங்களில் அதிரடி கண்காணிப்பு!

அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கம் (Partial Government Shutdown) காரணமாக, அந்நாட்டு விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கமாகப் பணியாற்றும் TSA ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுசெய்ய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த திடீர் மாற்றத்தால், அமெரிக்கா செல்லும் கனடியப் பயணிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ICE அதிகாரிகள் ஈடுபடுவதால், பயணிகள் மேலதிக விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என குடிவரவு சட்டத்தரணி க்ஸேனியா செர்ன் மெக்கல்லம் (Ksenia Tchern McCallum) அறிவுறுத்தியுள்ளார்.

கனடியர்கள் 6 மாதம் வரை விசா இன்றி தங்கும் அனுமதி பெற்றிருந்தாலும், எல்லையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை வழங்குவது அவசியமாகும்.

இதனால், அடிக்கடி பயணம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் மடிக்கணினியுடன் தங்கிப் பணியாற்றும் ‘டிஜிட்டல் நோமட்ஸ்’ (Digital Nomads) ஆகியோர் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாக நேரிடும்.

அமெரிக்கா செல்லும் கனடியர்கள் தங்களின் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தல் கடிதம், தங்குமிட விபரங்கள் மற்றும் போதுமான நிதி இருப்பதற்கான ஆதாரங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனடிய விமான நிலையங்களில் உள்ள (Pre-clearance) வசதி தற்போதைக்கு மாற்றமின்றி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles