கனடாவில் பனிச்சரிவு சோகம்​ – உயிரிழந்த 3 பேரும் சுவிஸ் பிரஜைகள் – சுற்றுலா நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) டெரஸ் (Terrace) பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பனிச்சரிவில் உயிரிழந்த மூவரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் (Swiss nationals) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மவுண்ட் நாஸ் (Mount Knauss) மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டி படுகாயமடைந்து வான்கூவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, ‘வைட் வைல்டர்னஸ் ஹெலிஸ்கையிங்’ (White Wilderness Heliskiing – WWH) நிறுவனம் தனது சேவைகளை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைத்துள்ளது.

இது ஒரு பணியிட விபத்து என்பதால், WorkSafeBC அமைப்பு மற்றும் ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2025 டிசம்பர் முதல் இதுவரை பி.சி மாகாணத்தில் பனிச்சரிவு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலைப்பகுதிகளில் பணிபுரிவோர் மற்றும் சுற்றுலா செல்வோர் வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles