கனடாவில் அதல பாதாளத்தில் பொருளாதார இடைவெளி – செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிக்க கோரிக்கை!

கனடாவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி, கனடாவின் 86 பில்லியனர் குடும்பங்கள் வைத்துள்ள சொத்து மதிப்பானது, நாட்டின் ஆகக்குறைந்த வருமானம் கொண்ட 6.2 மில்லியன் குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்புக்கு சமமாக உள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பேட்ரியாட்டிக் மில்லியனர்ஸ் கனடா‘ (Patriotic Millionaires Canada) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலான் டுஸோல்ட் (Dylan Dusseault), இந்த அதீத சமமின்மையைக் குறைக்க செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமமான பொருளாதார சூழலை உருவாக்க தங்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் எனச் சில செல்வந்தர்களே முன்வந்து கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிபுணர் ஜிம் ஸ்டான்போர்ட் (Jim Stanford) இது பற்றிக் கூறுகையில், செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்யப் பயன்படுத்தும் குறைப்பாடுகள் (Loopholes) மற்றும், குறிப்பாக மூலதன ஆதாய வரி‘ (Capital gains tax) சலுகைகளைச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறையான வரிச் சீர்திருத்தங்கள் மூலமே இந்த இடைவெளியைக் குறைத்து, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles