ஏர் கனடா விமானம் விபத்து – கனடிய விமானிகள் பலி – 41 பேர் காயம் – இருக்கையுடன் வெளியே வீசப்பட்ட பணிப்பெண் தப்பினார்!

மொன்றியாலில் (Montreal) இருந்து நியூயோர்க் லாகார்டியா (LaGuardia Airport) விமான நிலையத்திற்குச் சென்ற ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (AC8646) விமானம், தரையிறங்கும் போது தீயணைப்பு வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்திலிருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

விமானத்தில் இருந்த 72 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களில், 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேறொரு விமானத்தில் ஏற்பட்ட புகை மணம் காரணமாக அவசரமாகச் சென்றுகொண்டிருந்த தீயணைப்பு வாகனம் மீது, இந்த Bombardier CRJ900 ரக விமானம் மோதியுள்ளது.

விபத்துக்குச் சற்று முன்னர் விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் “நில்லுங்கள், டிரக் 1, ” (Stop, Truck 1. Stop) என எச்சரித்தும் மோதலைத் தவிர்க்க முடியாமல் போயுள்ளது.

விபத்தின் தாக்கத்தில் விமானத்தின் முன்பகுதி கடுமையாகச் சிதைந்துள்ளதுடன், பணிப்பெண் ஒருவர் இருக்கையுடனேயே வெளியே தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து லாகார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், டொராண்டோ பியர்சன் (Toronto Pearson) மற்றும் மொன்றியாலில் இருந்து நியூயோர்க்கிற்கான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனடிய வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) ஆகியோர் இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles