TTC பேருந்தில் மோதல் – நபர் ஒருவருக்குக் கத்திக்குத்து; மர்ம நபரைத் தேடி பொலிசார் வலைவீச்சு!

டொராண்டோவின் North York பகுதியில் உள்ள Wilson Avenue மற்றும் Keele Street சந்திப்பில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8 மணியளவில் TTC பேருந்திற்குள் ஆரம்பித்த வாக்குவாதம், அவர்கள் பேருந்தை விட்டு இறங்கிய பின்னரும் தொடர்ந்ததில் இந்த வன்முறை நிகழ்ந்ததாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய இரண்டாவது சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சுமார் 6 அடி உயரமும், மெலிந்த உடலமைப்பும் கொண்ட ஒரு கறுப்பினத்தவரையே பொலிசார் தேடி வருகின்றனர்.

அவர் கறுப்பு நிற மேலாடை (vest) மற்றும் சாம்பல் நிறத் தொப்பி போட்ட சட்டை (hooded sweater) அணிந்திருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles