University of Toronto: யூத எதிர்ப்பு உள்ளடக்கங்கள் தொடர்பாக பல் மருத்துவப் பீடாதிபதி மீது விசாரணை!

University of Toronto தனது பல் மருத்துவப் பீடத்தின் (Faculty of Dentistry) பீடாதிபதியான Anil Kishen மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அவர் தனது பாட விடயதானங்களில் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புச் சித்திரங்களைப் பயன்படுத்தியதாகக் எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணை முடிவடையும் வரை அவர் விடுப்பில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படங்கள் யூத எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதைப் புரியாமலேயே தான் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ள Anil Kishen, இதற்காகத் தனது மாணவர்களிடமும் பீடத்திடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேலும், அந்தப் படங்களை அவர் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளார்.

B’nai Brith Canada எனும் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த படங்களே இவ்வாறு சர்ச்சைக்கு காரணமாகியுள்ளன.

இஸ்ரேலியக் கொடியால் சுற்றப்பட்ட உருவம் மற்றும் பணக்குவியலில் இருக்கும் உருவங்கள் போன்ற சர்ச்சைக்குரிய சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

2009 முதல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவர், கடந்த ஆண்டு பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles