வீட்டு உரிமையாளருக்கு ஒரு வருடமாக வாடகை கொடுக்காமல் ஏமாற்றும் பெண்!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் வசிக்கும் ராமன்பிரீத் சிங் (Ramanpreet Singh) என்ற வீட்டு உரிமையாளர், தனது குடியிருப்பாளர் வாடகை தராததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

2025 ஏப்ரல் மாதம் இவரது வீட்டில் குடியேறிய ஒரு பெண், முதல் மற்றும் கடைசி மாத வாடகையைத் தவிர, கடந்த ஒரு வருடமாக எவ்விதப் பணமும் செலுத்தவில்லை எனபதால் அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதன்படி, உரிமையாளருக்கு குறித்த பெண் சுமார் $23,000 டாலர் வாடகை மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை நிலுவையில் வைத்துள்ளார்.

இதனால் தனது குடும்பச் செலவுகள் மற்றும் வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருதாக உரிமையாளர் கூறுகிறார்

இதே பெண் இதற்கு முன் 2023-ல் டவுன்டவுன் டொராண்டோவில் (Downtown Toronto) டிம் ரை (Tim Rye) என்பவரின் வீட்டில் தங்கியிருந்தபோது, $59,000 டாலர் வாடகை நிலுவை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அவர் (Content Creator) எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.

ஒன்டாரியோவின் காணி உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர் சபை (LTB) இந்தப் பெண்ணிற்கு எதிராக வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 9-ம் தேதி இதற்கான விசாரணை நடைபெறவுள்ளது.

புதிய வீட்டு உரிமையாளர், குடியிருப்பாளர்களைத் தேர்வு செய்யும் முன் ‘Openroom’ அல்லது ‘CanLII’ போன்ற தளங்கள் மூலம் அவர்களின் பின்னணியைச் சரிபார்க்குமாறு சட்ட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த கசப்பான அனுபவத்தால், தனது வீட்டை விற்க முடிவெடுத்துள்ளதாக ராமன்பிரீத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles