இம்மாதம் டொரண்டோவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் — தள்ளிப் போகும் கோடைக்காலம்

டொரண்டோ நகரத்தில் கடந்த வார இறுதியில் 30°C வரை சென்ற வெப்பநிலை, தற்போது மீண்டும் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களில் மிகவும் குளிர்ச்சியுடன் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாத நீண்ட விடுமுறைக்குப் பிந்தைய காலநிலை மீண்டும் குளிர்ச்சியாகியுள்ளது.

2006-ம் ஆண்டு மே மாத நீண்ட விடுமுறைக்குப் பிறகு பதிவான குளிர்ச்சியைத் தொடர்ந்து, இவ்வாண்டு இதுவே கடுமையான குளிர் வானிலை ஆகும் என்று வானிலை ஆய்வாளர் பில் கோல்டர் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழ்க்கிழமை வெப்பநிலை 11°C-க்கு குறையும் என Environment Canada தெரிவித்துள்ளது.

இதேபோல் வெள்ளிக்கிழமை 15°C வரை அதிகபட்சமாக இருந்தாலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு தினங்களில் வெயிலுடன் 18°C வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கோடைக் காலம் தள்ளிப் போவதுடன் டொரண்டோவாசிகள் வெப்பமான காலநிலைக்காக இன்னும் சில தினங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles