60 ஆண்டு கால இசைப் பயணம் நிறைவு – டொராண்டோவின் புகழ்பெற்ற ‘Steve’s Music Store’ க்கு பூட்டு!

டொராண்டோவின் இசை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ‘ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்’ (Steve’s Music Store), தனது 60 ஆண்டு கால வணிகத்தை நிறைவு செய்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (மார்ச் 22, 2026) குறித்த வணிக நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது.

ஒன்லைன் வர்த்தகப் போட்டி மற்றும் அதிகரித்து வரும் நிதி நெருக்கடி காரணமாக, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ள தனது கிளைகளை மூடிவிட்டு, மாண்ட்ரியல் (Montreal) நகரில் உள்ள தலைமை கிளையை மட்டும் தக்கவைத்துக்கொள்ள நிறுவனம் தீர்மானித்துள்ளது.

1965 இல் ஸ்டீவ் கிர்மன் (Steve Kirman) என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், “வாங்குவதற்கு முன் இசைத்துப் பாருங்கள்” (Try before you buy) என்ற தாரக மந்திரத்துடன் இசைக்கலைஞர்களின் புகலிடமாக விளங்கியது.

டொராண்டோவின் குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Queen Street West) பகுதியில் 1977 இல் திறக்கப்பட்ட இந்த கடை, நகரின் ‘பங்க்’ (Punk) இசை எழுச்சிக் காலத்தில் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.

இந்த கடையின் மூடல் குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், இது வெறும் கடை மட்டுமல்ல, இசைக்கலைஞர்கள் சந்திக்கும் ஒரு கலாச்சார மையம் என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

குயின் ஸ்ட்ரீட் பகுதியில் 2025 ஆம் ஆண்டு முதல் மூடப்படும் 12-வது முக்கிய வணிக நிறுவனம் இதுவாகும்.

இருப்பினும், ஸ்டீவ்ஸ் நிறுவனம் தனது விற்பனையை இனி ஒன்லைன் வாயிலாகத் தொடரத் திட்டமிட்டுள்ளது

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles