மாண்ட்ரியலில் (Montreal) வசிக்கும் ரவி சவுகான் (Ravi Chauhan) மற்றும் அவரது மகன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை மாலை கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவிருந்தனர்.
இந்நிலையில், பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தலையிட்டு அந்த உத்தரவை ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உயிருக்கு அஞ்சிக் குடும்பத்துடன் வெளியேறிய இவர்களில், ரவியின் மனைவிக்கு மட்டும் 2024 இல் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாக்கப்பட்ட நபர்களின் (Protected persons) குடும்ப உறுப்பினர்களைத் தன்னிச்சையாகப் பிரித்து நாடுகடத்தும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகக் குடிவரவு சட்டத்தரணி ஸ்டீவர்ட் இஸ்த்வான்பி (Stewart Istvanffy) கவலை வெளியிட்டுள்ளார்.
ரவியின் குடும்பம் இந்தியாவில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களை நாடுகடத்துவது மனித உரிமைகளை மீறும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரு மாத கால அவகாசம், இவர்களின் நிலையை மீண்டும் பரிசீலித்து நிரந்தரமாகக் கனடாவில் தங்குவதற்கான வழிகளை ஆராய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.










