கனடிய குடியுரிமைச் சட்டத்தில் அதிரடி மாற்றம் – அமெரிக்கர்களிடமிருந்து குவியும் விண்ணப்பங்கள்!

கனடிய குடியுரிமைச் சட்டத்தில் Bill C-3 எனும் புதிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து கனடிய குடியுரிமை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

2025 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோர் அல்லது தத்தெடுத்தவர்கள் கனடியர்களாக இருக்கும் பட்சத்தில், எவ்வித தலைமுறை கட்டுப்பாடும் இன்றி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல் தலைமுறையினருக்கு மட்டுமே (First-generation limit) இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இது அரசியலமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

ஒட்டாவாவைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி கசாண்ட்ரா புல்ட்ஸ் (Cassandra Fultz) கூறுகையில், 2025 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் பிறந்த, கனடிய வம்சாவளியைச் சேர்ந்த எவரும் இப்போது குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவின் கலிபோர்னியா (California), வாஷிங்டன் (Washington) மற்றும் ஓரிகான் (Oregon) போன்ற மேற்கு மாநிலங்களிலிருந்தும், கியூபெக் மற்றும் அக்காடியன் (Acadians) வம்சாவளியினரிடமிருந்தும் பெருமளவிலான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

குடியுரிமை என்பது தானாகக் கிடைக்காது என்றும், தகுதியுள்ளவர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles