Toronto-வில் TTC-யை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான மாற்றம் வருகிறது.
2026 செப்டம்பர் 1 முதல் புதிய “Monthly Fare Capping” முறை நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, ஒரே மாதத்தில் 47 கட்டணப் பயணங்களை முடித்த பின்னர், அந்த மாதத்தில் இலவச TTC பயணங்களை மேற்கொள்ளலாம்.
இதற்காக தனியாக பதிவு செய்யவோ, முன்கூட்டியே Monthly Pass வாங்கவோ தேவையில்லை. PRESTO Card, PRESTO mobile wallet, Debit Card அல்லது Credit Card ஆகியவற்றில் ஒரே payment method-ஐ தொடர்ந்து பயன்படுத்தினால், பயண எண்ணிக்கை தானாக கணக்கிடப்படும்.
ஆனால் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் PRESTO Card-ஐ ஒருநாள் பயன்படுத்தி, மற்றொரு நாளில் Credit Card அல்லது mobile wallet-ஐ பயன்படுத்தினால், அந்தப் பயணங்கள் தனித்தனியாக கணக்கிடப்படும். எனவே 47 பயணங்களுக்கான வரம்பை விரைவாக அடைய, ஒரே card அல்லது device-ஐ பயன்படுத்த வேண்டும்.
மேலும் இரண்டு மணி நேர transfer காலப்பகுதிக்குள் செய்யப்படும் கூடுதல் taps, தனித்தனி கட்டணப் பயணங்களாக கணக்கிடப்படாது. மாதம் முடிந்தவுடன் பயண எண்ணிக்கை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கும்.
இந்த புதிய முறையுடன் Adult, Youth, Senior மற்றும் Fair Pass Monthly Pass-கள் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படுகின்றன. எனினும் Adult 12-Month Pass மற்றும் Post-Secondary Monthly Pass தொடர்ந்து கிடைக்கும்.
ஆகவே 47 பயணங்களுக்குப் பிறகு அந்த மாதம் முழுவதும் TTC பயணம் இலவசம்.










