30 வருட பழைய பார்க்கிங் டிக்கெட் – சாரதி உரிமத்தை இழந்த ஒன்ராறியோ நபர்!

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில், 30 வருடங்களுக்கு முந்தைய $32.75 பெறுமதியான வாகன நிறுத்துமிட அபராதக் கட்டணத்தை (Parking ticket) செலுத்தவில்லை என்பதற்காக, சாரதி ஒருவரின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் லைம்ஹவுஸ் (Limehouse) பகுதியைச் சேர்ந்த ஜியோப் கிளென்டென்னிங் (Geoff Clendenning) என்பவருக்கே இந்த விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு றொரண்டோ (Toronto) நகரில் பெறப்பட்ட பார்க்கிங் டிக்கெட் ஒன்று முழுமையாகச் செலுத்தப்படாததால், அவரது சாரதி உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கடிதம் கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் இதை ஒரு மோசடி (Scam) என அவர் நினைத்துள்ளார்.

இது குறித்து சர்வீஸ் ஒன்ராறியோவை (Service Ontario) அவர் நாடியபோது, பழைய நிலுவைத் தொகைக்காக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் $32.75 அபராதத்தை செலுத்திய போதிலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உரிமத்தை மீண்டும் பெற (Reinstatement fee) கூடுதலாக $281 செலுத்த வேண்டியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Transportation) மற்றும் றொரண்டோ நகர நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களுக்கு காலாவதித் தேதி கிடையாது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி அவை முழுமையாகச் செலுத்தப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

றொரண்டோ நகரம் தற்போது பல மில்லியன் டாலர் பெறுமதியான பழைய நிலுவை அபராதங்களை வசூலிக்கும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57

Related Articles

Latest Articles