வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பயண முறைகளைக் கருத்திற்கொண்டு, அடுத்த ஆண்டு (2027) கோடைகாலத்தில் அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களுக்கு இடையிலான நான்கு நேரடி விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக Air Canada நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, Vancouver – Nashville, Tenn, Vancouver – Raleigh-Durham, N.C., Toronto – Charleston, S.C.,Montreal – Seattle, Wash ஆகிய வழித்தடங்களிலான சேவைகள் நிறுத்தப்படவுள்ளன.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பயணிகள் பயணம் சமீப காலமாகக் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என நிறுவனத்தின் பேச்சாளர் Sean Davidson தெரிவித்துள்ளார்.
எனினும், பிற கனடிய விமான நிலையங்களிலிருந்து குறிப்பிட்ட சில நகரங்களுக்குச் சேவைகள் தொடரும் என்றும், அதேவேளை Louisville, Indianapolis, Newark உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
