2026 எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) பிரிவுகளின் கீழ் யாருக்கு அதிக வாய்ப்பு!

கனடாவின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) திட்டத்தின் புதிய பிரிவுகளை கனடா குடியேற்றத் துறை அமைச்சர் லீனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) அறிவித்துள்ளார்.

திறன்மிக்க புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பிரிவுகளின் கீழ் கனடாவில் பணி அனுபவம் உள்ள வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விமானிகள் (Pilots), விமான மெக்கானிக்குகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை சார்ந்தவர்களும் வாய்ப்பு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடிய ஆயுதப்படையில் (Canadian Armed Forces) பணியாற்ற வெளிநாட்டு இராணுவ மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கும் இதனூடாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்தேடு, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த பிரெஞ்சு மொழிப் புலமை (French skills), சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள், மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான (Trades) முன்னுரிமைகள் இந்த ஆண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அழைப்புகள் (Targeted draws) உதவும் என அமைச்சர் லீனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) தெரிவித்துள்ளார்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles