கட்டுக்கடங்காமல் போகும் ‘டிப்பிங்’ கலாச்சாரம்? – 67 சதவீத கனடியர்கள் அதிருப்தி!

கனடாவில் உணவகங்கள் முதல் பல்வேறு சேவைகள் வரை வழங்கப்படும் டிப்‘ (Tip) எனப்படும் கூடுதல் தொகை வழங்கும் கலாச்சாரம் தற்போது எல்லை மீறிச் செல்வதாகப் பெரும்பான்மையான கனடியர்கள் கருதுகின்றனர்.

H&R Block நடத்திய புதிய ஆய்வின்படி, 67 சதவீத கனடியர்கள் இந்த டிப்பிங் கலாச்சாரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்பு உணவகங்களில் மட்டுமே எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கம், தற்போது தேநீர் கடைகள் மற்றும் ஏனைய சில்லறை விற்பனை நிலையங்களிலும் இயந்திரங்கள் மூலம் கட்டாயப்படுத்தப்படுவது மக்களைச் சினமடையச் செய்துள்ளது.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்தத் தொகையை வழங்கினர்.

எனினும், தற்போது டிஜிட்டல் இயந்திரங்களில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட (Suggested tips) அதிகப்படியாக காணப்படுகின்றமை நுகர்வோருக்கு மறைமுக அழுத்தமாக மாறியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த மேலதிகச் செலவு நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதென  ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது சேவைத் துறையில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles