விபத்து அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஊழியர் – அம்பலமான ரகசிய ஆவணங்கள்!

வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவன விமானங்கள் குறித்து கனடிய போக்குவரத்து அமைச்சுக்கு (Transport Canada) முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.

வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனத்தின் விமானங்களில் இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டதால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்தே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025 டிசம்பரில் இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாவதற்கு பல வாரங்களுக்கு முன்பே, விமான ஊழியர் ஒருவர் இது ஒரு “உடனடி ஆபத்து” (Imminent safety risk) என அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திவ் விமானங்களில் அதிகப்படியான பயணிகளை ஏற்றுவதற்காக ஒரு வரிசை இருக்கைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால், உயரமான பயணிகள் இருக்கைகளில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பயணிகள் விரைவாக வெளியேற இது பெரும் தடையாக இருக்கும் என அந்த ஊழியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்துப் புகார் அளித்த லிண்ட்சே நோபல் (Lindsay Noble) என்ற பயணி, தனது கணவர் இருக்கையில் அமர முடியாமல் அவதிப்பட்டதையும், இது குறித்து அரசு அலட்சியமாக செயல்பட்டது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, கடந்த ஜனவரி 16 அன்று வெஸ்ட்ஜெட் நிறுவனம் தனது இருக்கை அமைப்பை மீண்டும் மாற்றுவதாக அறிவித்தது.

அதன்படி, 180 இருக்கைகள் கொண்ட மூன்று விமானங்கள் 174 இருக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இருப்பினும், பாதுகாப்பு அபாயம் தெரிந்தும் அரசு ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles