145 சிறுவர்களை இலக்கு வைத்து ‘பாலியல் அச்சுறுத்தல்’ – றொரண்டோ தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் 33 ஆண்டுகள் சிறை!

சுமார் 145 சிறுவர்களை இலக்கு வைத்து, இணையவழியில் பாரிய ‘பலியியல் அச்சுறுத்தல் மற்றும் சுரண்டல்’ (Sextortion scheme) குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட றொரண்டோவை (Toronto) சேர்ந்த ரமணன் பத்மநாதன் (Ramanan Pathmanathan) என்ற 40 வயது நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் (U.S. Attorney’s Office for the District of Columbia) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அவர் ஏற்கனவே கனடாவில் (Canada) அனுபவித்து வரும் 12 ஆண்டு கால சிறைத்தண்டனையைத் தொடர்ந்து இந்த புதிய தண்டனை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டனைக்குப் பிறகு 10 ஆண்டுகள் அவர் பொலிஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக இவர், நியூ ஜெர்சி (New Jersey) பகுதியைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது சிறுவன் போல சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கியுள்ளார்.

பின்னர், 6 வயது முதல் சிறுவர்கள் வரை ஏமாற்றி, ஆபாசமான செயல்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அவற்றை காணொளியாகப் பதிவு செய்து வைப்பதுடன், சிறுவர்கள் மறுக்கும் போது அந்த காட்சிகளை அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.

2021 இல் றொரண்டோ பொலிஸாரால் (Toronto Police) கைது செய்யப்பட்ட இவர், பின்னர் 2025 டிசம்பரில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அங்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles