$125,150 லொட்டரி வென்றும் ஒரு டொலரும் கிடைக்கவில்லை! 48 மணி நேர விதியால் பரிசை இழந்த கனடியர்

லாட்டரியில் $125,000-க்கும் அதிகமான பரிசை வென்றுவிட்டு.. அந்தப் பணத்தைப் பெற முடியாமல் போனால் எப்படி இருக்கும்?

Calgary-யைச் சேர்ந்த Curtis Geiger என்பவருக்கு அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Calgary Stampede-இன் Showband 50/50 லாட்டரியில் அவர் வாங்கிய சீட்டுக்கு $125,150 பரிசு விழுந்துள்ளது. ஆனால் அதனை அவர் அறிந்தபோது, பரிசைப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.

Stampede நிகழ்வின்போது லாட்டரி சீட்டை வாங்கிய Geiger, அதன் பின்னர் வெளிநாட்டுப் பயணம் சென்றுள்ளார். பயணத்திற்கு முன்பு சீட்டிலிருந்த QR Code-ஐ scan செய்து இணையத்தளத்தில் விதிமுறைகளைப் பார்த்ததாகவும் அவர் கூறுகிறார்.

அங்கு பரிசை 48 மணி நேரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம் என்பதை கட்டாயமான காலக்கெடு அல்ல என்று தான் புரிந்துகொண்டதாக Geiger தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் லாட்டரி முடிவுகளைச் சரிபார்த்தபோதுதான், $125,150 வென்றிருப்பதை அவர் கண்டறிந்துள்ளார். அப்போது பரிசைப் பெற முயன்றபோது, 48 மணி நேர காலக்கெடு கடந்துவிட்டதால் பணத்தை வழங்க முடியாது என Calgary Stampede தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது பரிசுத் தொகையைப் பெறுவதற்கான சட்ட வாய்ப்புகளை ஆராய Geiger தற்போது வழக்கறிஞரின் உதவியை நாடி வருகிறார்.

லாட்டரியில் வெல்வது மட்டும் போதாது.. விதிமுறைகளையும் காலக்கெடுவையும் கவனமாகப் படிக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய எச்சரிக்கை!

Related Articles

Latest Articles