Niagara பகுதியில் மேலும் புதிய Casino-கள் மற்றும் பொழுதுபோக்கு வளாகங்கள் உருவாகுவதற்கான முக்கிய தடையை Ontario அரசு தற்போது நீக்கியுள்ளது.
இதன்படி, Niagara பகுதியில் Casino நடத்துவதற்காக MGE-க்கு இருந்த பிரத்யேக உரிமை நீக்கப்படுகிறது. இதனால் புதிய Casino மற்றும் entertainment நிறுவனங்கள் சந்தைக்குள் வருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
புதிய நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்ப நடைமுறையை 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் OLG ஆரம்பிக்கவுள்ளது.
Niagara-வின் தற்போதைய Casino-களுக்கு ஆண்டுதோறும் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வருகை தருவதுடன், Ontario மாகாணத்திற்கு ஆண்டுக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான gaming revenue கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை Ontario அரசின் Destination Niagara Strategy-யின் ஒரு பகுதியாகும். தற்போது ஆண்டுக்கு சுமார் 13 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் Niagara-வின் எண்ணிக்கையை 25 மில்லியனாக உயர்த்துவது, மேலும் Ontario பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 3 பில்லியன் டொலர் பங்களிப்பை உருவாக்குவது அரசின் இலக்காகும்.
புதிய Casino-கள் மட்டுமல்லாமல் theme park, போக்குவரத்து வசதிகள், விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களும் Destination Niagara திட்டத்தில் உள்ளன.
