ஹிஜாப் அணியும் ஆசிரியர்கள் பணிகளில் ஈடுபட தடை –  Quebec மத அடையாளத் தடைச் சட்டத்தினால் பெரும் அவதி!

Quebec மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டங்களான Bill 21 மற்றும் புதிய Bill 94 ஆகியவற்றால் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தன்னார்வலர்கள் (Parent Volunteers) பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அதனால், ஹிஜாப் அணியும் தாய்மார்கள், பல ஆண்டுகளாகப் பாடசாலைகளில் ஆற்றி வந்த நூலகப் பணிகள் மற்றும் மாணவர் போக்குவரத்து போன்ற தன்னார்வத் தொண்டுகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சீக்கிய மதத்தைச் சேர்ந்த Amrit Kaur மற்றும் Pavandeep Magon ஆகியோர், தங்களது தலைப்பாகை (Turban) காரணமாகத் தகுதியிருந்தும் ஆசிரியராகப் பணியாற்ற முடியாமலும், பாடசாலை நிகழ்வுகளில் உதவ முடியாமலும் தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டங்கள் தனிமனித உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இது தொடர்பான முக்கிய விசாரணை அடுத்த மாதம் கனடா உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of Canada) தொடங்கவுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles