விமானப் பயணிகளுக்கு கூடுதல் சுமை – கூடுதல் கட்டணம் விதிக்கும் எயார் கனடா!

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகிறது.

இதனால், ஏயார் கனடா வெக்கேஷன்ஸ் (Air Canada Vacations) நிறுவனம் தனது சுற்றுலாப் பொதிகளுக்கு (Vacation packages) மேலதிகமாக 50 டொலர் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (Fuel surcharge) விதிக்கவுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 6, திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 ஆம் திகதிக்குப் பிறகு பதிவு செய்யப்படும், விமானப் பயணத்தை உள்ளடக்கிய அனைத்து புதிய சுற்றுலாப் பொதிகளுக்கும் தலா ஒரு பயணிக்கு 50 டொலர் வீதம் இந்த நிலையான கட்டணம் வசூலிக்கப்படும்.

குறிப்பாக புளோரிடா (Florida), மெக்சிகோ (Mexico) மற்றும் கரீபியன் (Caribbean) உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட சூரிய ஒளிமிக்க சுற்றுலாத் தலங்களுக்கான (SUN destinations) பயணங்களுக்கு இது பொருந்தும்.

எனினும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயணங்களுக்கு இந்த விலை உயர்வு பாதிக்காது என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

விமான இயக்கச் செலவுகளில் எரிபொருள் விலை ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், சேவையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என ஏயார் கனடா வெக்கேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை முன்பதிவு செய்யும் போது, விற்பனை வரிகள் மற்றும் இதர கட்டணங்களுடன் இந்த 50 டொலர்கள் கூடுதல் கட்டணமும் சேர்க்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles