ஈரான் (Iran) மீதான போர் விரிவடைவது மற்றும் அதில் கனடிய இராணுவம் ஈடுபடுத்தப்படுவது குறித்துப் பெரும்பான்மையான கனடியர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Canada Pulse Insights நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில், 84 சதவீதத்தினர் ஹோர்மோஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மோதல் ஒரு பாரிய மத்திய கிழக்கு போராக மாறக்கூடும் என அஞ்சுகின்றனர்.
கனடிய இராணுவத்தினர் இதில் களமிறக்கப்பட்டால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என 80 சதவீதமானோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அங்கீகாரம் அல்லது நேச நாடுகளின் வலுவான கூட்டணி இருந்தால், 70 சதவீதமான கனடியர்கள் ஏதோ ஒரு வகையில் இராணுவப் பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளனர்.
ஆய்வாளர் ஜான் ரைட் (John Wright) கூறுகையில், டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான அமெரிக்காவின் நேரடி கோரிக்கையைவிட, ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதையே கனடியர்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 80 சதவீதமான மக்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கவே அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு வெறும் 35 சதவீதத்தினரே ஆதரவு வழங்கியுள்ளனர்.
