விமானப் பயணிகளின் லக்கேஜ் குறிகளை மாற்றி போதைப்பொருள் கடத்தல் – கனடாவில் அதிர்ச்சித் தகவல்!

கனடாவிலிருந்து (Canada) வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் அப்பாவிப் பயணிகளின் லக்கேஜ் குறிகளை (Bag tags) மாற்றி, அவர்கள் பெயரில் போதைப்பொருள் கடத்தப்படும் அதிர்ச்சிப் பின்னணி அம்பலமாகியுள்ளது.

CTV News நிறுவனத்தின் W5 புலனாய்வுப் பிரிவின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் குறைந்தது 17 அப்பாவிப் பயணிகள் இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்த்து.

விமான நிலைய ஊழல் ஊழியர்கள் சிலர், பயணிகளின் அசல் லக்கேஜ் குறிகளை அகற்றிவிட்டு, போதைப்பொருள் நிரப்பப்பட்ட வேறு பைகளில் அவற்றை ஒட்டிவிடுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடிய டொமினிகன் குடியரசு (Dominican Republic), பிலிப்பைன்ஸ் (Philippines), கொரியா (Korea) போன்ற நாடுகளுக்குச் சென்ற பயணிகள் இதனால் கைது செய்யப்பட்டு, பல மாதங்கள் சிறைத்தண்டனையையும் எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக றொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson International Airport) பணியாற்றிய 6 ஊழியர்களை RCMP காவல்துறை கைது செய்துள்ளது.

அண்மையில், நிக்கோல் (Nicole) என்ற டொராண்டோ (Toronto) பாராமெடிக்கல் ஊழியர் நியூசிலாந்துக்கு (New Zealand) பயணித்தபோது, வான்கூவரில் (Vancouver) வைத்து அவரது பெயரிலிருந்த லக்கேஜில் 20 கிலோவிற்கும் அதிக மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles