றொரண்டோ நகரில் 14 வயதுச் சிறுமி மாயம் – “அன்பே, தயவுசெய்து வீட்டுக்கு வா” எனப் பெற்றோர் கண்ணீர் மல்கக் கோரிக்கை!

கனடா, றொரண்டோ (Toronto) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ள 14 வயதுச் சிறுமியைத் தேடும் பணிகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தங்களின் மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு அவளது பெற்றோர் பொதுமக்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்தர் (Esther) என்ற இந்தச் சிறுமி, கடந்த மே 15 வெள்ளிக்கிழமை இரவு 11:15 மணியளவில் நோர்த் யார்க் பகுதியில் உள்ள ஏர்ல் பேல்ஸ் பூங்கா (Earl Bales Park in North York) பகுதியில் கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.

“எஸ்தி, என் அன்பே… நீ எந்தத் தப்பும் செய்யவில்லை, உன் மீது யாருக்கும் கோபமில்லை; தயவுசெய்து வீட்டுக்கு திரும்பி வந்துவிடு” என அவளது தாய் உருக்கமாகப் பேசியுள்ளார்.

சுமார் 127 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்தப் பூங்காப் பகுதியில், குதிரைப்படை அதிகாரிகள், ட்ரோன்கள் மற்றும் படகுப் படைகளைப் பயன்படுத்தி கடந்த 48 மணித்தியாலங்களுக்கும் மேலாகத் தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக றொரண்டோ பொலிஸ் பணிப்பாளர் ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury) தெரிவித்துள்ளார்.

காணாமல் போகும்போது பச்சை நிறச் சட்டையும், சாம்பல் நிறக் காற்சட்டையும் அணிந்திருந்த இச்சிறுமி 5 அடி 2 அங்குல உயரமுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் (CCTV) பதிவுகள் இருந்தாலோ உடனடியாகத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles