ரொறன்ரோ மேயர் தேர்தலில் முக்கியத்துவம் பெறும் ஸ்காபரோ!

cp24

ரொறன்ரோ மேயர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்திருக்கிறது ஸ்காபரோ!

தற்போதைய மேயர் ஒலிவியா சோ மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பிராட் பிராட்ஃபோர்ட் ஆகிய இருவரும் ஸ்காபரோவில் தமது தேர்தல் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செப்டம்பர் மாத ஆரம்பத்திலிருந்து இருவரும் தலா ஆறு தேர்தல் பிரசார நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். 

ஆனால், ஸ்காபரோ மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

போக்குவரத்து வசதி, வீட்டு வசதி, இளைஞர் பாதுகாப்பு, சுகாதார சேவை, வீதிப் போக்குவரத்து நெரிசல் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

மேயர் ஒலிவியா சோ, ஸ்காபரோ பஸ்வே திறப்பு மற்றும் TTC கட்டண உயர்வைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னிறுத்துகிறார்.

2027ஆம் ஆண்டிலும் TTC கட்டணங்களை அதிகரிக்காமல் வைத்திருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மறுபுறம், பிராட் பிராட்ஃபோர்ட், சில வீதிகளிலுள்ள பஸ்களுக்கான தனிப்பாதைகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

Eglinton East LRT திட்டத்திற்கும் முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஸ்காபரோவில் போதிய சுகாதார வசதிகளும் மருத்துவ நிபுணர்களும் இல்லாததால், பலர் சிகிச்சைக்காக ரொறன்ரோ நகர மையத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதாக சுகாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Previous articleCalgary நகரில் காரை திருட முயற்சி – Bolt cutter தாக்குதலுக்கு ஆளான நபர் படுகாயம்!
Next articleஸ்காபரோவில் கோர விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு – இருவர் மருத்துவமனையில்!