கனடாவின் Calgary நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Martindale சமூகத்தின் Martinvalley Crescent NE பகுதியில், காரைத் திருடும் முயற்சியின் போது போல்ட் கட்டர்களால் (Bolt cutters) நபர் ஒருவர் தாக்கப்பட்டுக் படுகாயமடைந்துள்ளார்.
வியாழக்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவம் குறித்து Calgary Police காவல்துறையினர் தெரிவித்ததாவது: சந்தேக நபர் ஒருவர் வாகனத்தை வழங்குமாறு மிரட்டிய போது உரிமையாளர் மறுக்கவே, அவரைப் போல்ட் கட்டரால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
இதன்பின்னர் அருகில் இருந்த மற்றொருவரினது காரைத் திருட முயன்றபோது அவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் Amine Ayman Abdelli (21) என்ற சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்தனர்.
கொள்ளை முயற்சி, ஆயுதங்களுடன் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வருகிற அக்டோபர் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
