ஸ்காபரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, Scarborough Golf Club Road மற்றும் Lawrence Avenue East சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரவு 10 மணியளவில், இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர், மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் தொடர்புடைய இரண்டு வாகனங்களின் ஆண் சாரதிகளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதிகள், பின்னர் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டன.
