மெக்சிகோ: கார்டெல் தலைவரின் கொலையைத் தொடர்ந்து வன்முறைகள் அதிகரிப்பு – கனடியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மெக்சிகோவின் (Mexico) சக்திவாய்ந்த Jalisco New Generation Cartel அமைப்பின் தலைவரான Nemesio Rubén Oseguera Cervantes (El Mencho) இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் Jalisco மாகாணத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது.

சுற்றுலாத் தலமான Puerto Vallarta உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டு சாலைத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அங்குள்ள சுமார் 5,000 கனடியர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு (Shelter-in-place) கனடிய அரசு (Global Affairs Canada) அறிவுறுத்தியுள்ளது.

வன்முறை காரணமாக Puerto Vallarta விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், Air Canada, WestJet உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தமது சேவைகளை ரத்து செய்துள்ளன.

நிலைமை சீராகும் வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அங்குள்ள கனடியர்கள் உள்ளூர் ஊடகங்களி செய்திகள் தொடர்பில் கவனமெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 40000 ஆயிரத்திற்கும் மேற்ட்ட கனேடியர்கள் Jalisco மாகாணத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles