மிசிசாகாவின் முதன்மை விளையாட்டு அரங்கம் பெயர் மாற்றம் – மாநகர சபைக்கும் உணவக நிறுவனத்திற்கும் இடையே சர்ச்சை

கனடா, மிசிசாகா (Mississauga) நகரின் மிகப்பெரிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்கமான ‘பாரமவுண்ட் பைன் புட்ஸ் சென்டர்’ (Paramount Fine Foods Centre), ஜூன் 1 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ‘மிசிசாகா ஸ்போர்ட்ஸ் அண்ட் எண்டர்டெயின்மென்ட் சென்டர்’ (Mississauga Sports and Entertainment Centre) எனப் பெயர் மாற்றப்படவுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

சுமார் 1.6 மில்லியன் டொலர் கட்டணப் நிலுவையை பாரமவுண்ட் உணவக நிறுவனம் நீண்ட காலமாக செலுத்தத் தவறியுள்ளது.

அதனுடன் 10 ஆண்டுகால பெயரிடும் உரிமை ஒப்பந்தத்தை (Naming rights agreement) ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துள்ளதாக மிசிசாகா மாநகர சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், வரிப்பணத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தொகையை மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் கரோலின் பாரிஷ் (Mayor Carolyn Parrish) உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அரங்கின் உணவு விநியோக சேவைகளையும் மாநகர சபையே பொறுப்பேற்கவுள்ளது.

எனினும், மாநகர சபையின் இந்த அறிவிப்பு தவறானது மற்றும் ஒருதலைப்பட்சமானது என பாரமவுண்ட் நிறுவனத்தின் நிறுவனர் முகமது பக்கிஹ் (Mohamad Fakih) மறுத்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக இத்தொகையைச் செலுத்தத் தயாராக இருந்தும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே மாநகர சபை இவ்வாறான பொது அறிவிப்பை வெளியிட்டது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பெயர் மாற்றத்தினால் அரங்கின் தற்போதைய முன்பதிவுகள், நிகழ்ச்சிகள் அல்லது ‘ரெப்டார்ஸ் 905’ (Raptors 905) கூடைப்பந்து போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles