ஒண்டாரியோ வனவிலங்கு சரணாலயத்தில் ஆப்பிரிக்க சிங்கங்கள் – அண்டை வீட்டாருடன் சர்ச்சை!

கனடா, ஒண்டாரியோவின் Parry Sound பகுதிக்கு அருகில் உள்ள Aspen Valley Wildlife Sanctuary வனவிலங்கு சரணாலயம், கடந்த ஆண்டு கியூபெக் (Quebec) வீதிோர விலங்குக்காட்சிசாலையில் இருந்து மீட்கப்பட்ட 7 ஆப்பிரிக்க சிங்கங்களை தற்காலிகமாக 6 மாதங்கள் பராமரித்தது.

Muskokaவின் அமைதியான காட்டுப்பகுதியில் சிங்கங்கள் கர்ஜிக்கும் சத்தம் கேட்டதால், தற்போது சரணாலய நிர்வாகத்திற்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் Carolyn Pearce என்ற பெண், சிங்கங்களின் தொடர்ச்சியான கர்ஜனை சத்தத்தால் தனது தூக்கம் பாதிக்கப்பட்டு, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறியுள்ளார்.

இதனால் அவர் சில காலம் தனது வீட்டை விட்டே வெளியேற வேண்டியிருந்தது.

உள்ளூர்வாசிகளான Hap Wilson போன்றோர், உள்ளூர் விலங்குகளைப் பராமரிப்பதை ஆதரித்தாலும், ஆபத்தான விசித்திர விலங்குகளை குடியிருப்புக்கு அருகில் வைப்பதை எதிர்க்கின்றனர்.

இருப்பினும், இந்த சிங்கங்களை அவசரக்கால தற்காலிகப் பராமரிப்பிற்காக வைக்க $600,000 நிதியுதவி கிடைத்ததாகவும், இதன் மூலம் அமைக்கப்பட்ட கூண்டுகள் எதிர்காலத்தில் உள்ளூர் விலங்குகளைக் காப்பாற்ற உதவும் என்றும் சரணாலயத்தின் நிர்வாக பணிப்பாளர் Linda Glimps தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சிங்கங்களை தற்காலிகமாக ஏற்பதை முற்றாக மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்த விவகாரம் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் தொடர்பாக Township of Muskoka Lakes திட்டமிடல் குழு விசாரணை நடத்தி வருகிறது.

Related Articles

Latest Articles