மரதன் போட்டியின் நடுவே காதலியை நிச்சயித்த Mississauga இளைஞர்!

கனடாவில் (Canada) நடைபெற்ற மரதன் போட்டியின் போது, ஓடிக்கொண்டிருந்த பாதையிலேயே காதலன் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்த சுவாரசியமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mississauga பகுதியைச் சேர்ந்த 37 வயதான கௌசிக் தேவந்திரன் (Gowsic Thevendran), தனது 2 வருடக் காதலியான 31 வயது ஷாரூஜா நடராஜாவுக்கு (Shaarujaa Nadarajah) TCS Toronto Waterfront Marathon போட்டியின் நடுவே திடீரென திருமண யோசனையை முன்வைத்தார்.

கௌசிக் முழு மாரத்தானிலும் (Full Marathon – 42.2 km), ஷாரூஜா அரை மாரத்தானிலும் (Half Marathon) ஓடிக்கொண்டிருந்த நிலையில், ‘பே அண்ட் வெலிங்டன்’ (Bay and Wellington streets) வீதி சந்திப்பில் இருவரும் பிரியும் இடத்திற்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.

பொதுமக்கள் சூழ்ந்திருந்த வீதியில் கௌசிக் முழங்காலிட்டு மோதிரத்தை நீட்டியதை இன்ஸ்டாகிராமில்  4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு Bumble செயலி மூலம் அறிமுகமான இத்தம்பதியினர், ஓட்டப்பந்தயத்தின் மீது கொண்ட விருப்பத்தால் இணைந்து பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஓட்டப்பந்தயத்தில் இருவருக்கும் புதிய உற்சாகத்தை அளித்ததுடன், போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்யவும் உதவியுள்ளது.

Related Articles

Latest Articles