பெண்ணை ஆன்லைனில் விற்பனை செய்த மத போதகர்!

கனடாவின் Toronto பகுதியை சேர்ந்த 37 வயதான மதபோதகரான பிராண்ட் வாண்டர்ஹைடன் (Brandt Vanderhyden), பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் பாரி (Barrie) நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் சேவைகளுக்காக ஆன்லைனில் விளம்பரம் செய்து, பெண் ஒருவரிடமிருந்து $240 பணத்தைப் பெற்று வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக இவர் மீது கடத்தல், ஆயுதத்துடன் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட 13 தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு வராததால், அரசுத்தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஏனைய குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.

ஏற்கனவே 8 மாதங்கள் காவலில் இருந்தமையாலும், 4 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்தமையாலும், அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை அனுபவித்ததாகக் கணக்கிடப்பட்டு (Time served) விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் 3 ஆண்டுகள் கண்காணிப்புக் காலம் (Probation) மற்றும் $240 நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த தாம் தற்போது திருந்தி, போதகராக (Preacher) மாறியுள்ளதாகவும், கடவுளின் வழியில் மற்றவர்களுக்கு உதவுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles