பிராம்ப்டனில் திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி லொரிகளுக்கு டீசல் நிரப்பிய மோசடி – சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்!

வணிக ரீதியிலான பெரிய லாரிகளுக்கு (Commercial Trucks) பலமுறை டீசல் நிரப்பிய இரண்டு சந்தேகநபர்களைப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police – PRP) தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், திருடப்பட்ட கிரெடிட் கார்டு விபரங்களைப் பயன்படுத்தி இவர்கள் மோசடி செய்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.  

கடந்த 2025 ஆம் ஆண்டு மே 13 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில், குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் டெல்டா பார்க் பவுலவர்ட் (Delta Park Boulevard) பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இந்த மோசடி நடந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் பாதுகாப்பு கேமராக்களில் (CCTV) சிக்காமல் இருப்பதற்காக, அதே இடத்திற்குத் திரும்பத் திரும்ப வந்து மொத்தம் 19 வெவ்வேறு தடவைகள் இந்த மோசடிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவரது விபரத்தைக் பொலிஸார் வெளியிட்டுள்ளது.

அவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க, தடித்த உடலமைப்பும் கறுப்புத் தாடியும் கொண்ட தெற்காசிய வம்சாவளி (South Asian) ஆண் என விவரிக்கப்பட்டுள்ளார்.

அவர் இறுதியாகப் பிரதிபலிப்பு அங்கி (Reflector vest), அடிடாஸ் (Adidas) சட்டை, பழுப்பு நிற கார்கோ காற்சட்டை மற்றும் பச்சை நிற ஓட்டப்பந்தய காலணிகளை அணிந்திருந்தார்.

இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 21 Division CIB பிரிவை 905-453-2121 (ext. 2133) என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles