பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த கனடா வாத்து (Canada Goose): மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்!

ஒன்டாரியோவின் வாட்டர்லூவில் (Waterloo) உள்ள வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழக (Wilfrid Laurier University) வளாகத்திற்குள் தற்செயலாகப் கனடா வாத்து (Canada Goose) ஒன்று புகுந்துள்ளது.

இந்த சம்பவம் அங்குள்ள மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுது.

தானியங்கி கதவு வழியாக உள்ளே நுழைந்த அந்த வாத்து, அங்கிருந்த ஸ்டார்பக்ஸ் (Starbucks) உணவகத்திற்கு முன்னால் சிறகுகளை அடித்துப் பறக்க முயன்றதால், பயந்துபோன மாணவர்கள் சிதறி ஓடினர்.

தற்போது வாத்துகளின் முட்டையிடும் காலம் என்பதால், அவை மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டும் இதே பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், தங்கள் வீட்டு வாசலில் முட்டையிட்டிருந்த வாத்தின் தாக்குதலுக்குப் பயந்து ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தனர்.

இது குறித்து குயெல்ப் ஹியூமன் (Guelph Humane Society) விடுத்துள்ள அறிவுறுத்தலில், வசந்த காலத்தில் வாத்துகள் தங்கள் கூடுகளைப் பாதுகாக்க மிகவும் தீவிரமாகச் செயல்படும் என்பதால், அவற்றுக்கு இடையூறு விளைவிக்காமல் போதிய இடைவெளியைப் பேணுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கனடா வாத்துகள் ‘புலம்பெயரும் பறவைகள் பாதுகாப்புச் சட்டத்தின்’ (Migratory Birds Convention Act) கீழ் பாதுகாக்கப்படுவதால், அவற்றின் கூடுகளைச் சிதைப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles