தீ விபத்தால் சேதமடைந்த கட்டடம் இடிப்பு – Don Valley Parkway (DVP) நெடுஞ்சாலை மூடல்!

கடந்த புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் Toronto நகரில் உள்ள 2 Matilda St பகுதியில் அமைந்துள்ள காலியான கட்டடத்தில் திடீரென மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இக்கட்டடமானது Don Valley Parkway (DVP) நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்து வெறும் 30 அடி தூரத்திலேயே அமைந்திருப்பதால், தீயணைப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பான இடிப்புப் பணிகளுக்காக Northbound – DVP நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Gardiner Expressway முதல் Dundas Street வரையிலான DVP வடபாகப் பாதைகளும், Don Roadway, Eastern Avenue, Queen Street ஆகிய இணைப்புகளும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை மூடப்படும் என நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தீ விபத்தில் பலத்த சேதமடைந்த இக்கட்டடத்தை Jim Jessop தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கனரக இயந்திரங்கள் மூலம் இடித்துத் தகர்த்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து Toronto Police தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Video thumbnail
அமெரிக்க வரியால் பாதிப்பு: உள்நாட்டு கம்பளித் துறையை மேம்படுத்த கனடா தீவிரம்!
00:34
Video thumbnail
அமெரிக்காவின் வரகளால் சரிவை சந்திக்கும் கனடாவின் குதிரைப்பந்தயத் துறை!
01:07
Video thumbnail
வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஆப்பிள் ஏற்றுமதி சந்தைகளை நாடும் நோவா ஸ்கோடியா!
00:59
Video thumbnail
ஆல்பர்ட்டாவை கனடாவோடு தக்கவைக்க எட்மண்டன் பேரணியில் பிரதமர் Mark Carney தீவிர பிரசாரம்!
00:55
Video thumbnail
Calgary அருகில் $87,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: 69 வயது வீட்டுப் பணிப்பெண் கைது!
00:54
Video thumbnail
Calgaryயில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: $6.8 மில்லியன் பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது!
00:52
Video thumbnail
கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!
00:51
Video thumbnail
Calgaryயில் பயங்கரமான தீ விபத்து: 3 பேர் பலி, 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
00:52
Video thumbnail
'Ultra-Processed' உணவுகள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – கனடியர்களிடம் ஆய்வு!
00:59
Video thumbnail
கனடா அரசு 'மிரட்டல்' விடுப்பதாக Cleveland-Cliffs - CEO குற்றச்சாட்டு!
00:54

Related Articles

Latest Articles