டொரண்டோ விமான நிலையத்தில் வெஸ்ட்ஜெட் விமானம் விபத்து!

கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson International Airport) செவ்வாய்க்கிழமை இரவு, நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட போது வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘போயிங் 737’ (Boeing 737) விமானம் ஒன்று, உணவுகளை ஏற்றிச் செல்லும் டிரக் (catering truck) மீது மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தின் இறக்கை பகுதி (winglet) குறித்த டிரக் மீது மோதியதாக வெஸ்ட்ஜெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தின் போது விமானத்திற்குள் பயணிகள் அல்லது விமான ஊழியர்கள் யாரும் இல்லை என்பதால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board – TSB) இச்சம்பவம் குறித்து தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், விசாரணையாளர்களை நேரில் அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் விமான நிலையத்தின் இயல்பான செயல்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பியர்சன் விமான நிலைய நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Related Articles

Latest Articles