கனடாவின் டொரண்டோ (Toronto) நகர மேயர் தேர்தலில் Olivia Chow மீண்டும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
CP24 மற்றும் CTV News செய்தி சேவைகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 54.2 சதவீத வாக்குகளைப் பெற்று Olivia Chow வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Brad Bradford 41.1 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
வாழ்க்கைச் செலவு மற்றும் வாழக்கைத் தரத்தை மையமாகக் கொண்டு பிரச்சாரம் செய்த Olivia Chow, TTC பொதுப் போக்குவரத்து கட்டணத்தைக் கட்டுப்படுத்துதல், வாடகைதாரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுதல் மற்றும் பள்ளி ஊட்டச்சத்து திட்டங்களை விரிவாக்குதல் ஆகிய வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ளார்.
2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மேயரான இவர், இந்த வெற்றியின் மூலம் மேயராக தனது முதல் முழுமையான 4 ஆண்டு பதவிக்காலத்தைப் பெறுகின்றார்.
