டேன் போர்த் கோ ஸ்டேஷன் துப்பாக்கிச் சூடு –  டொராண்டோ பொலிஸ் அதிகாரி குற்றமற்றவர் என SIU தீர்ப்பு!

டொராண்டோவின் டேன்போர்த் (Danforth) கோ ஸ்டேஷனில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் தொடர்பு பட்டிருந்தார்.  

குறித்த பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என ஒன்டாரியோவின் விசேட புலனாய்வுப் பிரிவு (SIU) அறிவித்துள்ளது.

2025 டிசம்பர் 6 அன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தன்று மெயின் ஸ்ட்ரீட் (Main Street) மற்றும் ஸ்டீபன்சன் அவென்யூ (Stephenson Avenue) பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு சென்றனர்.

அப்போது அந்த நபர் தன்னிடம் இருந்த பிபி துப்பாக்கியை (BB gun) எடுத்து அதிகாரியை நோக்கி நீட்டியுள்ளார்.

இதனால் தற்காப்புக்காக அந்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எந்தத் தவறுமில்லை என SIU பணிப்பாளர் ஜோசப் மார்டினோ (Joseph Martino) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் போது சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் பொலிஸாரின் உடல் கமெரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

உயிரிழந்த நபரிடமிருந்து பணம், போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் மற்றும் ஒரு பேனா ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழப்பு அல்லது பலத்த காயம் ஏற்படும் போது இது போன்ற சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles