கியூபெக் இடைத்தேர்தலில் Parti Québécois கட்சிக்கு 4-வது தொடர் வெற்றி!

கியூபெக் மாகாணத்தின் Chicoutimi தொகுதிக்கான இடைத்தேர்தலில் Parti Québécois (PQ) கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இது அக்கட்சி தொடர்ச்சியாக வெல்லும் நான்காவது இடைத்தேர்தலாகும்.

PQ வேட்பாளர் Marie-Karlynn Laflamme, 45 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்தபடியாக Conservative Party of Quebec வேட்பாளர் Catherine Morissette 26 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

ஆளுங்கட்சியான Coalition Avenir Québec (CAQ) கட்சிக்கு இந்தத் தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாகாண பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உரையாற்றிய PQ தலைவர் Paul St-Pierre Plamondon, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2030-ஆம் ஆண்டிற்குள் இறையாண்மை குறித்த பொதுவாக்கெடுப்பை (Sovereignty referendum) நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.

Related Articles

Latest Articles