கனடிய இராணுவ முகாம்களில் சீன மின்சார வாகனங்களுக்குத் தடையா? உளவு பார்க்கும் அச்சத்தில் பாதுகாப்பு நிபுணர்கள்!

கனடிய இராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு (EV) தடை விதிக்கப்பட வேண்டும் எனப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வாகனங்களில் உள்ள சென்சார்கள் மற்றும் கமெராக்கள் மூலம் முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சீனாவிற்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே போலந்து (Poland) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் BYD போன்ற சீன நிறுவனங்களின் வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளதாக துறைசார் நிபுணர் டெனிஸ் மோலினாரோ (Dennis Molinaro),  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கனடாவும் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவியர் (Pierre Poilievre) மற்றும் ஒன்ராறியோ முதல்வர் டக் போர்டு (Doug Ford) ஆகியோரும் இந்த “உளவு கார்கள்” (Spy cars) குறித்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி (David McGuinty) மற்றும் இராணுவத் தளபதி ஜெனி காரிக்னன் (Gen. Jennie Carignan), இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு, மலிவு விலை சீன வாகனங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பாதுகாப்பு எச்சரிக்கை அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles