கனடாவின் சொந்த ரொக்கெட் கனவு நனவாகிறது: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

விண்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற நாடாக விளங்கும் கனடா, இதுவரை தனது செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு பிற நாடுகளையே சார்ந்திருந்தது.

இந்நலையில், தற்போது முதன்முறையாக உள்நாட்டிலேயே ரொக்கெட்டுகளை ஏவும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதற்காக பெடரல் அரசாங்கம் சுமார் கால் பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மாகாணத்தில் உள்ள கான்சோ (Canso) நகருக்கு அருகில் Maritime Launch Services நிறுவனத்தால் அமைக்கப்படும்.

இதற்காக “ஸ்பேஸ்போர்ட் நோவா ஸ்கோஷியா” (Spaceport Nova Scotia) எனும் ஏவுதளத்திற்காக 200 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

2027 ஆம் ஆண்டுக்குள் இங்கிருந்து செயற்கைக்கோள்களைச் சுற்றுப்பாதைக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் மெலிசா க்வின் (Melissa Quinn) தெரிவித்துள்ளார்.

மேலும், ‘லான்ச் தி நார்த்‘ (Launch the North) திட்டத்தின் கீழ், ஒன்ராறியோவின் மார்க்கம் (Markham) நகரைச் தளமாகக் கொண்ட நோர்ட்ஸ்பேஸ் (Nordspace) உள்ளிட்ட மூன்று உள்நாட்டு நிறுவனங்களுக்கு தலா 8 மில்லியன் டொலர்கள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி (David McGuinty) கூறுகையில், தேசப் பாதுகாப்பு மற்றும் தன்னாட்சிக்கு விண்வெளிக்கான நேரடி அணுகல் மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் கனடிய விண்வெளி நிபுணர்கள் மீண்டும் தாயகம் திரும்பிப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles