கனடியப் பொருட்கள் மீதான வரியை மாற்றியமைக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்!

கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரிக்கொள்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் மீண்டும் மாற்றங்களைச் செய்துள்ளது.

இதன்படி கடல்பாசி (seaweed), பெட்டிகள் (packing boxes) போன்ற பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொக்கோ தூள் (cocoa powder), வினைல் தரை உறை (vinyl flooring) மற்றும் ஷாம்பூ (shampoos) போன்ற பொருட்கள் புதிதாக 50 சதவீத வரிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மெயின் (Maine) மாநில செனட்டர் சூசன் காலின்ஸ் (Susan Collins) விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே விவசாய உபகரணங்கள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை (U.S. midterm elections) மனதில் கொண்டே இந்த அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் சாதகமான ஒப்பந்தம் என்றால் இன்றே கையெழுத்திடத் தயார் என கனடியப் பிரதமர் மார்க் கார্নি (Mark Carney) தெரிவித்துள்ளார்.

மேலும், கனடா – அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) கனடியப் பொருளாதாரத்தின் நலனைப் பாதுகாப்பதே தமது முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles