கனடா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் கட்டுப்பாடற்ற தொழிலாளர் நகர்வுக்கு இடமில்லை: தூதர் Jonathan Wilkinson தகவல்!

கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே கையெழுத்தாகவுள்ள புதிய transatlantic ஒப்பந்தத்தில், தொழிலாளர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக நகர்வதற்கான முழு அளவிலான அனுமதி இடம்பெறாது என்றும், குறிப்பிட்ட சிறப்புத் துறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் ஐரோப்பிய யூனியனுக்கான கனடாவின் தூதர் Jonathan Wilkinson தெரிவித்துள்ளார்.

மொண்ட்ரியாலில் (Montreal) நடைபெறவுள்ள கனடா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டிற்கு முன்னதாகப் பேசிய தூதர் Jonathan Wilkinson, இரு தரப்பும் பயனடையும் வகையில் குறிப்பிட்ட சிறப்புத் தொழில் துறைகளில் மட்டுமே பகிரப்பட்ட தொழிலாளர் ஆற்றலைப் பயன்படுத்த ஆலோசிக்கப்படுவதாகக் கூறினார்.

மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் நகர்வை எளிதாக்க Erasmus+ என்ற ஐரோப்பிய யூனியனின் கல்வி மற்றும் பயிற்சி பரிமாற்றத் திட்டத்தில் கனடா இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளர் நகர்வு தவிர்த்து, கனிம வளங்கள் (Critical Minerals), ஆற்றல் (Energy), தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதிலேயே இந்த புதிய ஒப்பந்தம் அதிகம் கவனம் செலுத்தும்.

பிரதமர் Mark Carney மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen ஆகியோர் இந்த கூட்டாண்மையை “எதிர்காலத்திற்கான கூட்டணி” (Alliance of the future) என வர்ணித்துள்ளதுடன், CETA ஒப்பந்தத்தின் 10வது ஆண்டு நிறைவை ஒட்டி இம்மாநாடு நடைபெறுகிறது.

Related Articles

Latest Articles