கனடா – அமெரிக்கா இடையே புதிய எண்ணெய் குழாய் திட்டம் – டொனால்ட் ட்ரம்ப் இணக்கம்!

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் பிரம்மாண்டமான புதிய குழாய் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த புதிய திட்டம்: “கீஸ்டோன் லைட்” (Keystone Light) என்று அழைக்கப்படுகிறது.

பிரிட்ஜர் பைப்லைன் விரிவாக்கத் திட்டம் (Bridger Pipeline Expansion), கனடாவின் சஸ்காட்சுவான் (Saskatchewan) மாகாணத்திலிருந்து அமெரிக்காவின் மொன்டானா (Montana) மற்றும் வயோமிங் (Wyoming) வழியாக எண்ணெயைக் கொண்டு செல்லும்.

இந்த குழாய் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5,50,000 பேரல் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல முடியும்.

இது ஏற்கனவே ஜோ பைடன் (Biden) நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் (Keystone XL) திட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு கொள்ளளவைக் கொண்டது.

இத்திட்டத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் ஏற்கனவே உள்ள குழாய் வழித்தடங்களிலும், 80 சதவீதம் தனியார் நிலங்களிலும் அமைக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தினால் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்துள்ள நிறுவன செய்தித் தொடர்பாளர் பில் சால்வின் (Bill Salvin), பாதுகாப்பு மற்றும் கசிவுகளைக் கண்டறிய ஏஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 2029 ஆம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர்  ஜோ பைடன் பைடன் ரத்து செய்த திட்டத்திற்கு மாற்றாக இந்த புதிய திட்டத்தை ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
16 வயது சிறுவனிடம் போதைப்பொருளும் பணமும்!முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
00:51
Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33

Related Articles

Latest Articles