ஹாமில்டன் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

ஹாமில்டன் (Hamilton) நகரின் மையப்பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை 6:30 மணியளவில் 191 Main St. W பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது ஹாமில்டன் (Hamilton) நகரில் இந்த ஆண்டில் பதிவான மூன்றாவது கொலைச் சம்பவமாகும்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியவர்களுக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கருதுகின்றனர்.

சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வருவதாகவும், இதுவரை துப்பாக்கிகள் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் ஹாமில்டன் பொலிஸார் (Hamilton police) தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த கட்டிடம் CityHousing Hamilton Corporation மூலம் நிர்வகிக்கப்படும் மலிவு விலை வீட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு குடியிருப்பு ஆகும்.

மேலதிக விசாரணை நடைபெற்று வருவதால் பொதுமக்களை அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் எனப் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் 905-546-4725 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Video thumbnail
16 வயது சிறுவனிடம் போதைப்பொருளும் பணமும்!முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
00:51
Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33

Related Articles

Latest Articles