Calgary நகரில் நடைபெற்ற ‘Forever Canadian’ பேரணியில் பேசிய பிரதமர் Mark Carney, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என வாக்களிக்குமாறு அங்குள்ள மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மாகாணம் பிரிந்து செல்வது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொது வாக்கெடுப்பில் (Referendum), நாட்டின் ஒற்றுமையைக் காக்க வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், மாகாணத்தின் சுயாட்சியை அதிகரிக்கும் மீதமுள்ள 9 கேள்விகளுக்கும் ஆதரவாக வாக்களிக்குமாறு முதல்வர் Danielle Smith பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர்தல் மற்றும் சமூக சேவைகள் தொடர்பான இந்த 9 கூடுதல் கேள்விகள் குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










