கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் கனடாவின் நிலப்பாட்டை நோக்கி நகர்ந்து வருவதாகப் பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் (Ottawa) நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த Mark Carney, “அமெரிக்கா எங்களது வர்த்தக நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, அமெரிக்க அதிபர் Donald Trump கைச்சாத்திடும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் முழுமையாக மதிப்பார் என்பதற்குத் தன்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கனடாவின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் எல்லைகளுக்கு உட்பட்ட ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திடப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
அடுத்த வாரம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்கள் (Midterm elections) காரணமாக, வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.
