உங்கள் காரில் உங்களுக்குத் தெரியாமல் GPS Tracker பொருத்தப்பட்டிருக்கிறதா? — வாகனத் திருடர்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் புதிய யுக்தி குறித்து Halton பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் Oakville-ஐச் சேர்ந்த ஒருவர் தனது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான Accutag tracking device ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், GTA மற்றும் Hamilton பகுதிகளில் உயர்ரக வாகனங்களை இலக்குவைத்த 14 வாகனத் திருட்டுகளுடன் ஒரே நபருக்கு தொடர்பிருக்கலாம் என Halton Regional Police தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆகஸ்ட் 18ஆம் திகதி Quebec-ன் Saint-Jérôme பகுதியைச் சேர்ந்த 25 வயதான Darryl Davance, Joey Tremblay என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணையின்போது மற்றொரு முக்கியமான திருட்டு யுக்தியையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
Shopping mall அல்லது hotel parking lot போன்ற பரபரப்பான இடங்களில் விலையுயர்ந்த வாகனத்தை முதலில் தெரிவுசெய்யும் திருடர்கள், அதில் சிறிய GPS அல்லது Bluetooth tracker ஒன்றை மறைவாகப் பொருத்துகின்றனர்.
பின்னர் அந்த tracker மூலம் வாகனம் எங்கு செல்கிறது என்பதை கண்காணித்து, CCTV அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் நிறுத்தப்படும் சமயத்தைத் தேர்ந்தெடுத்து வாகனத்தை திருட முயற்சிக்கின்றனர்.
License plate பின்னால், side mirror பகுதியில், fuel door அருகில், wheel well அல்லது bumper போன்ற இடங்களில் இத்தகைய tracker-கள் மறைக்கப்படலாம் என பொலிஸார் எச்சரிக்கின்றனர்.
உங்கள் வாகனத்தில் தெரியாத tracking device ஒன்றைக் கண்டால் அதை உடனடியாக தூக்கி எறிய வேண்டாம். பொலிஸாரை தொடர்புகொள்ளுங்கள். அதில் விசாரணைக்கு உதவும் ஆதாரங்கள் இருக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
